search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக பிடிபி"

    காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் பேராசையே காரணம், இந்த பேராசைக்கு, காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளனர். இதனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. #BJPDumpsPDP #ShivSena
    மும்பை :

    காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில்,  சமீபத்தில் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக திடீரென பா.ஜ.க. அறிவித்தது. அதன் பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். தற்போது அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

    இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜக.வுடன் கூட்டணி ஆட்சி செய்துவரும் சிவசேனா கட்சி அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    பிரதமர் நரேந்திர மோடி குழந்தையுடன் விளையாடுவதை போன்று இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்ட பின்னர் கூட்டணி ஆட்சியில் இருந்து பா.ஜ.க விலகியுள்ளது.

    முன்னெப்போதும் இல்லாமல் தற்போது காஷ்மீரில் மிக மோசமான சூழல் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது, பெரும் எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் பயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ளனர்.

    இந்த அராஜகங்கள் எல்லாம் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தான் நடந்தேறியது. ஆனால், மெகபூபா முப்தியின் பி.டி.பி கட்சியின் மீது அனைத்து பழிகளையும் சுமத்திவிட்டு தான் ஒரு புனிதமான கட்சி என்பது போல் பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது.

    காஷ்மீர் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை மோடி உருவாக்குவார் என்ற நம்பிக்கையிலேயே பா.ஜ.க.விற்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சியை விட கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே பரவாயில்லை எனும் மனநிலைக்கு அம்மாநில மக்கள் வந்துவிட்டனர்.

    பாஜகவின் பேராசையே அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க தூண்டியது, அந்த பேராசைக்காக காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துவிட்டார்கள். வரலாறு ஒருபோதும் பாஜகவின் செயலை மன்னிக்காது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #BJPDumpsPDP #ShivSena
    காஷ்மீரில் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீரை பா.ஜ.க. கூட்டணி அரசு தீயில் இட்டது, கவர்னர் ஆட்சியிலும் இதன் சேதாரம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். #BJPDumpsPDP #BJPPDP #RahulGandhi
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியுடனான கூட்டணியை பா.ஜ.க வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, காஷ்மீர் நிலவரம் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க. கூட்டணி தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணி அரசு நமது தீரம்மிக்க ராணுவ வீரர்கள் உள்பட பலரை பலிகொடுத்து காஷ்மீரை தீயில் இட்டது.


    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின் கடுமையான உழைப்பை வீணாக்கி, நாட்டுக்கு இழப்பையும் ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தலைமையிலான கவர்னர் ஆட்சியிலும் இதன் சேதாரம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். #Kashmir #Kashmironfire #RahulGandhi #BJPDumpsPDP #BJPPDP #Congress
    காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துப் போனதில் ஆட்சியில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.வுக்கும் சமபங்கு உண்டு என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார். #Congress #BJPDumpsPDP #BJPPDP
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.

    காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. இன்று அறிவித்தது.

    மாநிலத்தில் பெருகிவரும் பயங்ரவாதத்தை கட்டுப்படுத்தி, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாநில அரசிடம் உள்ள அதிகாரம் அனைத்தும் கவர்னரிடம் அளிக்கப்பட வேண்டும். அங்கு பயங்கரவாதத்தை ஒழித்த பிறகுதான் அரசியல் ரீதியான செயல்பாடுகளை தொடர முடியும் என பா.ஜ.க. பொது செயலாளர் ராம் மாதவ் குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மெகபூபா முப்தி தீர்மானித்துள்ளார்.


    இந்நிலையில், காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துப் போனதில் ஆட்சியில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.வுக்கும் சமபங்கு உண்டு என அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும், பாராளுமன்ற மேல்சபை காங்கிரஸ் கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

    புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், ‘ஜம்மு - காஷ்மீர் நிலவரத்தில் தனது பொறுப்புகளை துறந்துவிட்டு பா.ஜ.க. ஓடிப்போக கூடாது. ஜம்மு - காஷ்மீர் நிலவரத்துக்கு பா.ஜ.க.வும் சமமாக பொறுப்பேற்க வேண்டும். உண்மையில், இந்த ஒட்டுமொத்த நிலவரத்துக்கும் மத்திய அரசுதான் முதல் குற்றவாளி’ என்று குறிப்பிட்டார்.

    தற்போது நடந்தது நன்மையாகவே நடந்துள்ளது. காஷ்மீர் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைவார்கள். கடந்த மூன்றாண்டுகளாக ஏராளமான பொதுமக்களும் ராணுவத்தினரும் இங்கு கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரை சீரழித்துவிட்டு தற்போது அரசில் இருந்து பா.ஜ.க. வெளியேறியுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.

    பி.டி.பி. கட்சியுடன் இணைந்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பி.டி.பி. கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார். #Congress #BJPresponsible #Kashmirsituation #BJPDumpsPDP #BJPPDP #MehboobaMufti
    ×